Skip to main content

10,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து! தமிழக முதல்வரின் அறிவிப்பு - முழு விவரம்!

  மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் செய்திக் குறிப்பில் , மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் பொதுத் தேர்வுகளை தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளதால் , அரசு இது குறித்து விரிவாக ஆய்வு செய்து , மாணவர்களை நோய்த் தொற்றில்
இருந்து காக்க வருகின்ற 15.06.2020 முதல் நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளும் , நடைபெறாமல் விடுபட்ட பாடங்களுக்கான பதினோராம் வகுப்பிற்கான பொதுத்தேர்வுகளும் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது எனவும் , இந்த தேர்வுகள் இரத்து செய்யப்பட்ட காரணத்தால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது எனவும் , மேல்நிலை இரண்டாமாண்டு மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

இப்பொருள் தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன .


1. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் 15.06.2020 முதல் 25.06.2020 வரையிலான நாட்களில் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மார்ச் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது .

2. மார்ச் 2020 பருவத்திற்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வில் நடத்தப்படாமல் விடுபட்டு போன பின்வரும் பாடத்தேர்வுகள் முழுமையாக இரத்து செய்யப்படுகிறது .

i . வேதியியல் , கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் ( புதிய பாடத்திட்டம் )
ii . வேதியியல் , கணக்குப்பதிவியல் , புவியியல் மற்றும் தொழிற்கல்வி கணக்குப்பதிவியல் ( பழைய பாடத்திட்டம் )

3. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளும் , நடைபெறாமல் விடுபட்ட பாடங்களுக்கான பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ள காரணத்தால் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது . மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 % மதிப்பெண்களும் , மாணவர்களின் வருகைப் பதிவின் அடிப்படையில் 20 % மதிப்பெண்களும் வழங்கப்படும் .

4. 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வுகளான வேதியியல் , கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடத் தேர்வுகளை கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக எழுதாத தேர்வர்களுக்கு மட்டும் 18.06.2020 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்ட மறு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது . இத்தேர்வு நடைபெறும் நாள் குறித்த விவரம் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும் .

5. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு , பத்தாம் வகுப்பு மற்றும் தேர்வு நடைபெறாமல் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ள விவரத்தினையும் , தேர்வுகள் இரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தினையும் , அவர்களது பள்ளிகளில் பயிலும் சம்பந்தப்பட்ட மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் தெரிவிக்குமாறு அறிவுறுத்தவேண்டும் .


6. இரத்து செய்யப்பட்ட பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுத விண்ணப்பித்திருந்த தனித்தேர்வர்கள் குறித்த அறிவிப்பு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும்.

7. முதன்மைக் கல்வி அலுவலர்கள் , தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பத்தாம் வகுப்பு மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு தேர்வுகளுக்கான வினாத்தாள் கட்டுக் காப்பாளர்களுக்கும் , மேற்குறிப்பிட்ட விவரத்தினை தெரிவித்து , அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கட்டுக் காப்பு மையங்களை திறக்கக்கூடாது என அறிவுறுத்த வேண்டும் .

8. அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை , வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு பணியில் இருப்பதை முதன்மைக் கல்வி அலுவலர்கள் உறுதி செய்துக்கொள்ளவேண்டும் .



*தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து. 11ம் வகுப்பு தேர்வும் ரத்து, அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு.

        *காலாண்டு மற்றும் அரை ஆண்டு தேர்வுகளின் அடிப்படையில் 80% மதிப்பெண்களும், வருகையின் அடிப்படையில் 20% மதிப்பெண்களும் வழங்கப்படும்.



        *நிலுவையில் உள்ள 12-ஆம் வகுப்பு தேர்வுகள் தேதி பின்னர் அறிவிக்கப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி


2019-2020 ஆம் கல்வி ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மற்றும் 11 ஆம் வகுப்பில் தேர்வு நடத்தாமல் விடுபட்டு போன [ வேதியியல் , கணக்கு பதிவியல் புவியியல் ( புதிய பாடத்திட்டம் ) , வேதியியல் , கணக்கு பதிவியல் , புவியியல் , தொழிற்கல்வி - கணக்கு பதிவியல் ( பழைய பாடத்திட்டம் ) ] ஆகிய பாடங்களுக்கான தேர்வுகள் ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தேர்வு நடத்த ஏற்கனவே அரசு ஆணை பிறப்பித்து , அதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு , மாண்புமிகு உயர் நீதிமன்றம் இந்த தேர்வுகளை தற்போது கொரோனா தொற்று அதிகமாக உள்ள நிலையில் , தள்ளி வைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அரசு விரிவாக ஆய்வு செய்தது . தற்போது உள்ள நிலையில் கொரோனா தொற்று சென்னையிலும் , சில மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது . நோய் தொற்று வல்லுநர்கள் , நோய் தொற்று குறுகிய காலத்தில் குறைய வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்துள்ளனர் . எனவே பெற்றோர்களின் கோரிக்கையையும் , நோய் தொற்றின் தற்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு , மாணவர்களை நோய் தொற்றிலிருந்து காக்க , வருகின்ற 15 ஆம் தேதி முதல் நடைபெறவிருந்த 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளும் , 11 ஆம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகளும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.


எனவே , இந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் , மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது . மாணவர்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டில் அந்தந்த மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 % மதிப்பெண்களும் , மாணவர்களின் வருகை பதிவின் அடிப்படையில் 20 % மதிப்பெண்களும் வழங்கப்படும் . 12 ஆம் வகுப்புத் தேர்வைப் பொறுத்தவரையில் , ஏற்கனவே தேர்ச்சி பெறாதவர்களுக்கு நடத்தப்படவிருந்த மறு தேர்வு ஒத்தி வைக்கப்படுகிறது. சூழ்நிலைக்கேற்ப 12 ஆம் வகுப்பு மறுதேர்வுகளுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும்.

Comments

Popular posts from this blog

Election 2021 - ஆசிரியர்கள் தேர்தல் படிவம் நிரப்ப "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்"

 Election 2021 - ஆசிரியர்கள் தேர்தல் படிவம் நிரப்ப "பாகம் எண்" மற்றும் "வரிசை எண்" தெரிந்துகொள்ள - Direct Link  உங்களின் புதிய வார்டு எண், புதிய பாகம் எண், புதிய வரிசை எண் அறிந்து கொள்ள தற்பொழுது தமிழகத்தில் உள்ளாட்சிகளின் வார்டுகளை மாற்றி வரையறை செய்துள்ளார்கள்.

மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023  மகரம்:  மகர ராசி அன்பர்களே  கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு பிறகு உங்கள் ராசிநாதன் சனிபகவான் உங்கள் ராசிக்கு வருகை தந்திருக்கிறார். ஏதோ ஒரு நிர்பந்தத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படலாம். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். குடும்பம் சார்ந்த விஷயங்களில் பேசும்போது கருத்து தெரிவிக்கும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.

கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் கவனத்திற்கு,..

 கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் கவனத்திற்கு,.. Safety and Security, SMC/SMDC, SCOPE, Mapping skill, ICT ஆகிய பயிற்சிகளில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் விவரங்களை EMIS இணையதளத்தில்   பதிவு செய்யும் வசதி தற்போது வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியரும் தங்களது School login ID வழியாக இந்த விவரங்களை பதிவு செய்ய