தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், 1914 மே, 28ம் தேதி பிறந்தவர் ப.சுந்தரேசனார். 'பிடில்' கந்தசாமி தேசிகரிடம், இசை பயின்றார். 1935 முதல், 17 ஆண்டுகளுக்கும் மேலாக, கும்பகோணத்தில் வாழ்ந்த, வேதாரண்யம் ராமச்சந்திரனிடம், செவ்விசை பயின்றார்.ஆடுதுறையில், 'அப்பர் அருள்நெறிக் கழகம்' துவக்கி, தொடர் இசைப்பொழிவுகள் நிகழ்த்தினார்.
திருவையாறு அரசர் கல்லுாரியில், புலவர் வகுப்பு இசையாசிரியராகவும்; அண்ணாமலைப் பல்கலையில், தேவார இசை விரிவுரையாளராகவும் பணிபுரிந்துள்ளார். மதுரை காமராஜர் பல்கலையில், தமிழிசை ஆய்வுக்குப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.'இசைத் தமிழ்ப் பயிற்சி, முதல் ஐந்திசைப் பண்கள், இசைத்தமிழ் அகரநிரல், பாணர்கள் பயிற்றுவித்த இசைமுறை' போன்ற பல நுால்களை எழுதியுள்ளார். 1981 ஜூன், 9ம் தேதி இறந்தார்.'பண்ணாராய்ச்சி வித்தகர்' குடந்தை, ப.சுந்தரேசனார் காலமான தினம் இன்று!

Comments
Post a Comment