Skip to main content

துலாம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

 துலாம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

துலாம்:

 துலா ராசி அன்பர்களே 

சனி பகவான் உங்க ராசிக்கு நான்காம் வீடான மகரத்துக்கும், ஐந்தாம் இடமான கும்பத்துக்கும் உரியவர். அவர் இப்போதைய பெயர்ச்சியில் உங்க ராசிக்கு மூன்றாம் வீடான தனுசிலிருந்து, நான்காம் இடமான மகரத்திற்கு மாற்றம் அடைகிறார். உங்கள் ராசிக்கு தைரிய வீர்ய இளைய சகோதர ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான், தற்பொழுது சுக ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார்.


இப்படி மாறக்கூடிய சனி பகவான் தனது மூன்றாம் பார்வையாக உங்களுடைய ரண ருண ரோக ஸ்தானம் – ஏழாம் பார்வையாக உங்களுடைய தொழில் கர்ம ஜீவன ஸ்தானம் – பத்தாம் பார்வையாக உங்களுடைய ராசியையும் பார்க்கிறார். இப்போது நான்காம் இடத்துக்கு மாறக்கூடிய சனிபகவானின் அமைப்பின் படி நீங்க அவசரமும் அலட்சியமும் இல்லாமல் செயல்படவேண்டிய காலகட்டம். தெளிவாகத் திட்டமிட்டு தைரியமாக எடுக்கும் முடிவுகள் நன்மையே தரும். சிலருக்கு இடமாற்றம், பதவி மாற்றம், வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும்

எந்த விஷயத்திலும் நிதானமும், கவனமும் அவசியம். கடினமான சூழ்னிலைகலில் உனர்ச்சி வசப்படாமல் பொறுமை மிக அவசியம். உங்களுடைய விஷயங்களிலும், உங்களுடைய குடும்பம் சம்பந்தமான விவாதங்களிலும் பிறருடைய தலையீட்டை தவிர்ப்பது மிகவும் நன்மையைக் கொடுக்கும். வார்த்தைகளில் நிதானம் அவசியம். கூட்டுத்தொழிலில் சந்தேகம் கூடாது. உங்களின் விவேகமான செயல்கள் நிச்சயமான முறையில் நன்மைகளை தரும்.

பணத்தைக் கையாள்வதில் கவனம் அவசியம். குடும்பத்தில் ஏற்ப்படும் சுப நிகழ்ச்சிகளால் சந்தோஷம் அடைவீர்கள். குடும்பப் பிரச்னைகளில் மூன்றாம் நபர் தலையீடு இல்லாமல் பார்த்துக்கொள்வது நன்மை சேர்க்கும்.வீடு-மனை, ஆடை-ஆபரணம், வாகனம்-சொத்துக்கள் சேரும். ஆடம்பரத்தையும், கேளிக்கையும் தவிர்ப்பது மிகவும் நல்லது.பேச்சில் அவ்வப்போது ஆணவம் தலை தூக்க நேரலாம். கவனத்துடன் தவிர்த்துக் கொள்ளவும். உங்களின் பேச்சாற்றல் அதிகரிக்கும்; தன்னம்பிக்கை உயரும்.


எல்லாவற்றிலும் லாபம் கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சுமுக உறவு இருக்கும். உங்களின் எண்ணங்களை அடுத்தவர்கள் நல்ல முறையில் புரிந்து கொள்வார்கள்.

புதிய பொறுப்புகள் தாமாகவே தேடி வரும். கொடுக்கல் வாங்கல்களில் முறையான குறிப்புகள் அவசியம். குறுக்கு வழியில் செல்ல மனம் நினைக்கும். நேர் வழியில் செல்லவும். இதன்மூலம் பல பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நல்ல முறையில் இருக்கும். இதனால் மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள்.

அரசுத்துறையினர்க்கு படிப்படியா ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். திட்டங்கள் எதையும் முழுமையாக ஆலோசித்து செயல்படுத்துவது நல்லது. யாருக்கும் ஜாமீன் தருவது, வக்காலத்து வாங்குவது தவிர்ப்பது நல்லது. மேலிடத்திற்கு எதிரான பேச்சை தவிருங்கள். சட்டத்திற்குப் புறம்பான வழிகளை யோசிக்க வேண்டாம். எப்போதோ செய்த தவறுக்கு இப்போது தண்டனை அனுபவிக்க வேண்டி வரலாம். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் போது ஆவணங்களை படித்து பார்த்து அதன் பிறகு கையெழுத்திடவும். நேரம் தவறாமை மிகவும் அவசியம்.


கலைத்துறையினருக்கு புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். சக கலைஞர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தக்கபடி பயன்படுத்தி, பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள்.பெண்களுக்கு பொறுப்புகள் உணர்ந்து செயல்பட்டால் மேன்மைகள் வந்து சேரும், தன்னம்பிக்கையோட செயல்பட்டா, கஷ்டங்கள் விலகி மகிழக்கூடிய காலகட்டம்.

குடும்பத்து உறவுகளின் ஆலோசனைகளை பெறுவது நன்மை சேர்க்கும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்னைகள் தானாகவே தீரும். உங்கள் புகழும், கௌரவமும் உயரும். மாணவர்கள் தன்னம்பிக்கையோட செயல்பட்டால், தலைநிமிர்ந்து நடக்கலாம். படிப்பில் முழு கவனம் அவசியம். ஆசிரியர் வழிகாட்டுதலின்படி நடப்பது நன்மை அளிக்கும். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.

பரிகாரம்: 

குல தெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும்.

சிறப்பு பரிகாரம்: 

காக்கைக்கு தினமும் சாதம் வைத்து வரவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்:

 “ஓம் மஹாலக்ஷ்மியை நம” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும். அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7, 9.


அதிர்ஷ்ட ஹோரைகள்: 

சந்திரன், செவ்வாய், சுக்கிரன், குரு. அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு. அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்.


Comments

Popular posts from this blog

EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்..

EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்., 1. https://emis.tnschools.gov.in/ வலைதள முகவரிக்கு செல்லவும்...

மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023  மகரம்:  மகர ராசி அன்பர்களே  கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு பிறகு உங்கள் ராசிநாதன் சனிபகவான் உங்கள் ராசிக்கு வருகை தந்திருக்கிறார். ஏதோ ஒரு நிர்பந்தத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படலாம். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். குடும்பம் சார்ந்த விஷயங்களில் பேசும்போது கருத்து தெரிவிக்கும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.

Aadhaar-ல் முகவரியை மாற்ற வேண்டுமா? mAadhaar App மூலம் நொடியில் முடியும் வேலை

 Aadhaar-ல் முகவரியை மாற்ற வேண்டுமா? mAadhaar App மூலம் நொடியில் முடியும் வேலை புதுடில்லி: இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் மிக முக்கியமான ஆவணமாகும். ஆதார் அட்டையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்குகிறது. இது அட்டைதாரரின் அனைத்து தகவல்களையும் கொண்டிருக்கும். ஆதார் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவர பதிவுகளையும் கொண்டிருக்கும்.