Skip to main content

சிம்மம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

 சிம்மம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

சிம்மம்:

 சிம்மராசி அன்பர்களே, 

ஆறாம் இடமான ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறி இருக்கக்கூடிய சனி பகவான் மறைவு ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஆனாலும் அவருடைய பார்வையின் மூலமாக நல்ல பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. வாக்கு வன்மை ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். பணம் சார்ந்த பிரச்சனைகள் ஒரு முடிவிற்கு வந்து சேரும்.


குடும்பத்தில் இருக்கக்கூடிய குழப்பங்கள் சிக்கல்கள் அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேரும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நல்லபடியாக நடக்கும். மங்கள காரியங்களில் இருந்து வந்த தடைகள் நீங்கப் பெறுவீர்கள். உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்கள் கட்டுப்படுவார்கள். மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

வீடு மனை சார்ந்த விஷயங்களில் சிறிய சுணக்க நிலை ஏற்படலாம். முடிந்தவரை எந்த ஒரு விஷயத்திலும் திட்டமிட்டுச் செய்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். தாயார் தாய்வழி உறவினருடன் பேசும்போதும் கருத்துக்களை தெரிவிக்கும் போதும் கவனம் அவசியம். குழந்தைகளுடைய காரியங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் அவசியம். முக்கியமாக வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம்.


உங்கள் உடம்பிற்கு செரிமானமாகாத உணவுகளை தவிர்ப்பது நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்த இடத்தில் கடன் உதவி கிடைக்க பெறுவீர்கள். வண்டி வாகனம் பயன்படுத்தும் போது மிகவும் ஜாக்கிரதையாக பயன்படுத்த வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவோடு, எதிர் ப்பார்த்த இடமாற்றம் , பதவி உயர்வு போன்ற நற்பலன்களை எளிதில் பெற்று மகிழ்வீர்கள். வியாபாரிகளுக்கு உங்களுக்கு வாடிக்கையாளர்களின் ஆதரவு தொடர்ந்துநல்லமுறையில் இருந்து வரும்.

நீங்கள் வியாபார ஸ்தலத்தை விரிவுபடுத்தவும், வேறு புதிய இடத்திற்கு மாற்றவும் அல்லது கிளைகளைத் திறக்கவும் முயற்சி செய்து வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்து அதிக அளவில் இருப்பு வைக்காமல் இருந்தால், உங்களுக்கு நஷ்டம் ஏற்பட வாய்ப்பேயில்லாமல், முழுமன நிறைவு கிட்டும் வகையில் திருப்திகரமான ஆதாயம் கிடைத்து வருவதில் தடையே இராது கணிசமான லாபமும் அதிக் கையிருப்பும் இருப்பதன் மூலம் மனைவியின் பெயரில் சொந்த வீடு வாங்கும் அமைப்புண்டு.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகளைத் தேடி நீங்கள் பலரைச் சந்திக்கச் சென்ற நிலை மாறி வாய்ப்பு தரும் நோக்கில் பல முன்னனி நிறுவனங்கள் தாமே உங்களைத் தேடி வந்து வாய்ப்பு கொடுக்கும் நிலை உண்டு. உங்கள் திறமைகள் முழுவதையும் வெளிப்படுத்தி ரசிகர்களின் அபிமானத்தையும் ஆதரவையும் பெருவாரியாகப் பெறுவீர்கள்.


மாணவர்களுக்கு கல்வியில் அதிக மதிப்பெண்கள் பெற்று, ஆசிரியர்களின் பாரட்டுகளைப் பெறுவீர்கள். கல்விச் சலுகைகள் பெறக்கூடிய வாய்ப்பு உண்டு. விளையாட்டு, போட்டிகள் போன்றவற்றிலும் பரிசுகளைப் பெற்று மகிழ்வீர்கள்.அயல் நாட்டுப் பயண வாய்ப்புகளும், உயர் படிப்புக்காக வெளிநாடுகளுக்குச் செல்லக் கூடும். படிப்பு முடிவடைவதற்கு முன்னரே சிலருக்கு வேலை வாய்ப்பு முன்வரக்கூடும்.

அரசியல்வாதிகளுக்கு உங்கள் தன்னலமற்ற தொண்டுக்குப் பாரட்டுகள் குவியும். தலைமையின் நன்மதிப்பையும் தொண்டர்களின்பெரும் ஆதரவையும் பெற்றுள்ள உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் உங்களூக்குத்தனி மரியாதையைப் பெற்றுத் தரும்.பொருப்பான பதவிகள் சில உங்கத்தேடிவரும் உங்கள் பொருளாதார நிலையும் நல்ல முறையில் வளர்ச்சியடையும். வங்கிக்கணக்கில் சேமிப்பு பெருகும்.வீடு,மனை, வண்டி,வாகன வசதிகளைக் குறைவறப்பெற்றுக் களிப்பில் திளைப்பீர்கள். பெண்களுக்கு வீட்டுக்குத் தேவையான நவ நாகரிகப் பொருள்களை வாங்கி வீட்டை அழகுபடுத்துவீர்கள்.

புத்திர வழியில் மகிழ்ச்சிதரும் நிகழ்ச்சிகள் நடைபெற இடமுண்டு. குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் நிம்மதிக்காகவும் பெருமளவில் பாடுபடும் உங்கள் மீது அனைவருமே அன்பு செலுத்த முன்வருவார்கள். குடும்ப பிரச்சனைகள் வெளியில் தெரியாமல் எதையுமே பக்குவமாக சமாளிப்பீர்கள். ஆடை,ஆபரணச் சேர்க்கை,உறவினர் வருகை எல்லமே உங்கள் மகிழ்ச்சியைப் பெருக்கும் வகையில் அமையும். சிலர் மனம்போல மாங்கல்யம் அமையப் பெருவீர்கள். உங்கள் பிறந்தவீட்டு வகையிலான உங்கள் கணவருக்குப் பெரிதும் துனையாயிருக்கும்

பரிகாரம்: 

ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும்.


சிறப்பு பரிகாரம்: 

வில்வ இலைகளை அருகிலிருக்கும் சிவனுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும். சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ருத்ராய நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 

1, 3, 5, 9. அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், புதன், குரு அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன், வியாழன்.

Comments

Popular posts from this blog

8 new WhatsApp features you need to know

WhatsApp recently joined the 1-billion users club. The Facebook-owned WhatsApp has now become almost the de facto mode of communication in many countries around the globe. The regular updates the app gets has gone a long way in bolstering its user base. The popular instant messaging app has received a slew of new features in the past few months. Here's a glance at 6 such cool features you should know about. We tell you the 8 most awaited and exciting features that you can now find on your WhatsApp:

Udise Plus - Emis இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு

அனைத்து வகைப் பள்ளிகளிலும் Udise Plus படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் Emis இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு