கன்னி சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023
கன்னி:
கன்னி ராசி அன்பர்களே!
சனி பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடமான மகரத்துக்கும், ஆறாம் வீடான கும்பத்துக்கும் உரியவர். அவர் இப்போதைய பெயர்ச்சியின் மூலம் உங்க ராசிக்கு நான்காம் இடமான தனுசு ராசிலிருந்து இருந்து ஐந்தாம் இடமான மகரத்திற்கு மாற்றம் அடைகிறார். இதுவரைக்கும் அர்த்தாஷ்டம்னு சொல்லக் கூடிய நான்காம் சனியால் பலவித அல்லல்களை அனுபவித்த நீங்கள் அந்தக் கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி மலர ஆரம்பிக்கும். தம்பதிகள் இடையில் இருந்த கருத்து வேற்றுமைகல் நீங்கி ஒற்றுமை உருவாகும். உறவுகள் மேல் நீங்க காட்டிய தூய்மையான அன்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் ஏங்கின நிலை மாறி, உங்கள் அன்பு எல்லோராலும் புரிந்து கொள்ளப்படும்.
நீங்கள் இழந்த புகழ், பெருமை எல்லாம் மீண்டும் உங்களுக்குக் கிடைக்கும். உங்களுடைய உண்மையான திறமையும், உழைப்பும் பிறரால் உணரப்படும்.சொந்தங்கள் இடையிலும், நட்பின் இடையிலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. முன்னோர் கடன்களை முழுமையாக நிறைவேற்றினால், சுபகாரியத்தடைகள் விரைவாக விலகும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வம்பு, வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள்.வீடு, மனை வாங்கும் யோகம் வரும். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்து கொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும்.
அலுவலகத்தில் இதுவரை நிலவிய அல்லல் நீங்கி அனுகூலம் ஏற்படும். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள், அவர்களே தேடி வந்து உதவி எதிர் பார்க்கும் சந்தர்ப்பம் வரும். முடிந்தவரை நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது அனுகூலத்தை ஏற்படுத்தும். பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். உங்களைப் பற்றிப் புறம் பேசும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடமிருந்து நாசூக்காக விலகிவிடுவீர்கள். சரியான திட்டமிடல்அவசியம். பதவியும் பாராட்டும் கிடைக்கும் சமயத்துல பொறுப்பும் பணிச்சுமையும் சேர்ந்தே அதிகரிக்கும். குறுக்கு வழியில் எந்தச் செயலையும் செய்ய நினைக்க வேண்டாம்.விலை உயர்ந்த பொருட்களையும், பணத்தையும் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். புதிய முதலீடுகலில் அவசரம் கூடாது.
அரசுத்துறையினருக்கு ஏற்றமும் மாற்றமும் ஏற்படும். அரசுத் துறை சார்ந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்க்கக்கூடிய பதவி மாற்றம், இடமாற்றம் நிச்சயம் கிட்டும். எதிலும் நேர்மையும், நிதானமும் மிகவும் அவசியம். வழிகாட்டலும், சரியான திட்டமிடலும், சரியான முன் யோசனையும் அவசியம். சட்டத்திற்கு புறம்பாக எந்த காரியத்தையும் நீங்கள் திட்டமிட வேண்டாம். அகலக்கால் வைக்காமல் செயல்பட வேண்டியது அவசியம். எவரிடமும் மனம் திறந்து பேச வேண்டாம். உங்கள் செயல்களை நேர்த்தியாகச் செய்வீர்கள். பண வரவும் நன்றாகவே இருக்கும்.
தொழில் துறையினருக்கு சிக்கல்கள் நீங்கும் சீரான வளர்ச்சி ஏற்படும். நேரடி கவனத்தோடு செய்யும் முயற்சிகள் உரிய லாபத்தை கொடுக்கும. உழைப்பை அதிகப்படுத்திக்கொண்டு, கர்வத்தை விட்டொழித்துத் திறந்த மனதுடன் இயங்கினால் புகழ் பெறலாம். கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவும் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது.
பெண்களுக்கு இதுவரை மனசுல இருந்த இனம்புரியாத பயமும் குழப்பமும் நீங்கும் தன்னம்பிக்கையும் தைரியமும் ஏற்படும். சாதிச்சு, வெற்றிப் படியில ஏறக்கூடிய சந்தர்ப்பங்கள் நிச்சயமான முறையில் வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி உண்டாகும். உடல்நலத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் படிப்படியாக தீரும். பணவரவு அதிகமாகும் போது சேமிப்பை அதிகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமாகும்.
மாணவர்கள் கல்வியில் மிகுந்த ஈடுபாடு காட்டுவீர்கள். விளையாட்டுத்துறையில் சாதனைகளைப் புரியக்கூடிய ஒரு காலகட்டமாக இது அமைந்திருக்கிறது. வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. எதிர்ப்புகள் விலகும். கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். உங்கள் கௌரவம் உயரும். அலட்சிய போக்கை கைவிடுவது நல்லது.
பரிகாரம்:
அருகிலிருக்கும் ஐயப்பன் ஆலயத்திற்கு சென்று சேவிப்பது பாவங்களை போக்கும். சிக்கலான பிரச்சனைகள் தீரும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.
சிறப்பு பரிகாரம்:
சர்க்கரைப் பொங்கல் செய்து புதன் கிழமைகளில் ஏதேனும் ஒரு ஆலயத்தில் விநியோகம் செய்யவும். சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் சாஸ்தாய நம” என்ற மந்திரத்தை தினமும் 5 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 5, 6, 9. அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், குரு, சுக்கிரன். அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு. அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி.
Comments
Post a Comment