Skip to main content

மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

 மகரம்:

 மகர ராசி அன்பர்களே

 கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு பிறகு உங்கள் ராசிநாதன் சனிபகவான் உங்கள் ராசிக்கு வருகை தந்திருக்கிறார். ஏதோ ஒரு நிர்பந்தத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படலாம். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். குடும்பம் சார்ந்த விஷயங்களில் பேசும்போது கருத்து தெரிவிக்கும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.


எந்த சூழ்நிலையிலும் நிதானத்தை தவறவிடாமல் பொறுமை இருப்பது அவசியமாகிறது. உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கை அவசியம். முடிந்தவரை முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தீர ஆலோசித்து எடுப்பது நன்மையை கொடுக்கும். பங்குதாரர்களுடன் சில முரண்பாடுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேல் இடத்துடன் அதிகமான பொறுப்புகளை சுமக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்கள் உடைய ஆதரவு உங்களுக்கு கிடைக்கும்.

உங்களைச் சுற்றி நடக்கும் விஷயங்களையும் உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப உங்கள் செயல் திட்டங்களை மாற்றி அமைத்து வெற்றி பெறுவீர்கள். வேலை தேடி அலைந்து வந்த சிலர் இப்போது நல்லதொரு வேலையில் அமர்ந்து விடுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் நிரம்பிக் காணப்படும். வியாபாரிகளுக்கு நாளுக்குநாள் வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகி வருவதன் மூலம் வியாபாரத்தில் முன்னேற்றமான போக்கும், திருப்திகரமான லாபமும் உண்டாகும்.


பொருளாதார நிலையில் உண்டாகும் முன்னேற்றத்தின் காரணமாக சேமிப்புகளிலும் அசையா சொத்துகளிலும் முதலீடு செய்வீர்கள். வண்டி, வாகன வசதிகளையும் அமைத்துக் கொள்வீர்கள். தரமான பொருள்களைக் கொள்முதல் செய்வதிலும், வாடிக்கையாளர்களைத் திருப்தி செய்வதிலும் உங்கள் நேரடி கவனத்தைச் செலுத்துவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் சிக்கல் எதுவும் ஏற்படாத அளவுக்கு பக்குவமாக நடந்து கொள்வது அவசியம்.

கலைத்துறையினருக்கு புதிய புதிய வாய்ப்புகள் பெருமளவில் தேடி வரும். வாய்ப்பு தேடி நீங்கள் பெருமளவில் அலைந்த நிலைமாறி, உங்களைத் தேடி பலர் வரும் நிலை ஏற்படும். அதற்கேற்ற முறையில் உங்கள் தகுதிகளைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு. சோர்வின்றி உழைத்து உங்கள் திறமைகளை முழுமையாக வெளிப்படுத்துங்கள். இதனால் அனைவரின் நன்மதிப்பையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். உங்கள் பெருமையும் உயரும். எல்லாரிடமும் சுமுகமாகப் பழகி வருவதும் அவசியம். சிலர் அரசு மற்றும் தனியார் அமைப்புகள் வழங்கும் விருதுகளுக்குத் தேர்வு பெறுவீர்கள். வீடு, வண்டி, வாகன வசதிகளை அமைத்துக்கொண்டு குடும்பத்தில் அனைவரின் மகிழ்ச்சிக்கும் வழிவகுப்பீர்கள்.


மாணவர்களுக்கு கல்வித்துறையில் சாதனை படைத்தவர்களாகச் சிறப்பிடம் பெற்று விளங்குவீர்கள். அரசு மற்றும் பொது சமூகநல அமைப்புகள் வழங்கும் கல்விச் சலுகைகள் உங்களுக்குக் கிடைத்து பெருமையும் புகழும் அடைவீர்கள். பெற்றோர் ஆசிரியர்களின் பாராட்டுகளையும் பெற்று மகிழ்வீர்கள். அறிவியல், மருத்துவம் போன்ற துறையில் பயில்வோர் கூடுதல் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உயர்கல்வி பெற வெளிநாடுகளுக்குச் செல்லும் விருப்பம் நிறைவேறி மகிழவும் சிலருக்கு வாய்ப்புண்டு. சிலர் படித்துக் கொண்டிருக்கும் போதே வேலை வாய்ப்பைப் பெறக்கூடிய நிலையையும் அடைவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு உங்கள் செல்வாக்கு நாளுக்குநாள் பெருகி வரும் உங்கள் தன்னலமற்ற பணிகளின் தன்மைகளைப் புரிந்து கொண்டு உங்களுக்குச் சிறப்பான பதவிகளை அளிக்கத் தலைமை முன்வரக்கூடும். தலைமை மட்டுமல்லாமல் தொண்டர்களும் உங்களை மிகவும் மதித்துப் போற்றிப் பாராட்டுவார்கள். பொருளாதார வசதி நல்ல முறையில் மேம்படும் என்ற காரணத்தால் வாழ்க்கையில் அத்தியாவசியத் தேவைகளைப் பெற்று மகிழ்வீர்கள். பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் பிரச்சனைகள் எதுவும் எழாத வண்ணம் மிக நல்ல முறையில் நடத்திச் செல்வீர்கள்.


சிலர் விரும்பியவர்களையே மணந்து கொள்ளும் இனிய வாய்ப்பைப் பெறுவீர்கள். மணமான பெண்களில் சிலர் இப்போது மகப்பேறு பாக்யத்தைப் பெற்று மகிழ்வீர்கள். மகளின் அமைப்புகளில் பொறுப்பானதும் பெருமைக்குரியதுமான பதவிகளைச் சிலர் பெறுவீர்கள். சேமிப்புகள் பெருகி மனமகிழ்ச்சியடைவீர்கள் என்றாலும் அதை நம்பகமற்ற சீட்டு கம்பெனிகளில் கொடுத்து ஏமாறாமல் முறையாக வங்கிகளில் சேமிப்பது மிக அவசியம்.


பரிகாரம்: 

ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வணங்க வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். சிறப்பு பரிகாரம்: அருகம்புல்லை அருகிலிருக்கும் சாத்தி விநாயகருக்கு வழிபடவும். சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ம்கணபதயே நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

 அதிர்ஷ்ட எண்கள்: 

2, 6, 9. அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன். அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி

Comments

Popular posts from this blog

EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்..

EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்., 1. https://emis.tnschools.gov.in/ வலைதள முகவரிக்கு செல்லவும்...

முட்டைக்கோஸ் பொங்கல் | CABBAGE PONGAL பச்சைப்பருப்பை

  தேவையான பொருட்கள் முட்டைக்கோஸ் 250 ஜிஎம்எஸ் மூங் டால் 1 ஃபிஸ்ட்ஃபுல் (பச்சைப்பருப்பு) நெய் 3 டீஸ்பூன் முந்திரி பருப்புகள் 1 டீஸ்பூன் மிளகுத்தூள் 1 டீஸ்பூன் சீரக விதைகள் 1 டீஸ்பூன் இஞ்சி துருவல் 2 டீஸ்பூன் தேவைக்கேற்ப உப்பு HING 1/2 TSP கறிவேப்பிலை 1 டீஸ்பூன் அறிவுறுத்தல்கள் முட்டைக்கோஸை சாப்பரில் நறுக்கி தனியாக வைக்கவும். பச்சைப்பருப்பை குக்கரில் வேகவைத்து, நன்றாக மசிக்கவும். ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் கீல், சீரகம், மிளகுத்தூள், துருவிய இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதை ஒதுக்கி வைக்கவும். அதே கடாயில் துருவிய முட்டைக்கோஸ் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்க்கவும். கடாயின் மூடியை மூடி, முட்டைக்கோசுடன் உப்பு சேர்த்து நன்கு சமைக்கவும். வெந்ததும் வேகவைத்த பருப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உப்பு சுவைக்கு ஏற்ப சரிசெய்யவும். பொங்கலில் பொரித்த பொருட்களை சேர்க்கவும். நன்றாக கலக்கவும். எனக்கு இன்னும் கொஞ்சம் நெய் சேர்க்க வேண்டும். பரிமாறும் தட்டுக்கு மாற்றவும். தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது அவக்கை ஊறுகாயுடன் சூடாக பரிமாறவும். படம் வாரியான வழிமுறைகள் தேவையான அளவு தண்...