Skip to main content

கும்பம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

கும்பம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

 கும்பம்: 

கும்ப ராசி அன்பர்களே

 சனி பகவான் உங்கள் இராசிக்கு 12-ம் இடம் உரியவர். இதுவரை உங்களுடைய ராசிக்கு பதினோராம் இடமான தனுசு ராசியில் இருந்த அவர் தற்பொழுது அயன சயன போக விரய ஸ்தானமான 12-ஆம் இடமான மகர ராசிக்கு மாற்றம் அடைகிறார். இப்போதைய பெயர்ச்சியால் உங்களுக்கு ஏழரைச் சனியின் ஆதிக்கம் தொடங்குகிறது. ஏழரைச் சனியின் தொடக்கமாக இதை விரைய சனி என்றும் சொல்வார்கள்.


அதே சமயம் சனி பகவான் உங்கள் ராசிக்கு உரியவர் என்பதாலும் இப்போது செல்லக்கூடிய மகரராசி அவருடைய ஆட்சி வீடு என்பதாலும் சங்கடங்கள் அதிகமாக இருக்காது. அதே வேளையில் உங்களுடைய செயல்களுக்கு ஏற்ப நற்பலன்களும் அல்லது கெடுபலன்கள் உண்டாகும். நேர்மையும் நிதானமும் அவசியம். இதுவரைக்கும் லாப ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் தற்பொழுது விரைய ஸ்தானத்திற்கு வருவதால் திட்டமிடப்படாத செலவுகள் ஏற்படலாம். வரவு-செலவு சீராக இருக்கும். சேமிக்கும் பழக்கத்தை அதிகரித்துக் கொள்வது அவசியம். செலவுகளை சுருக்கிக் கொள்வதும் நல்லது.

அலுவலகத்தில் இதுவரை நிலவிய அல்லல்கள் விலகி அனுகூலம் வீச ஆரம்பிக்கும். உங்களை உதாசீனப்படுத்தி அவர்களை தேடி வந்து உதவி எதிர் பார்க்கும் சந்தர்ப்பம் வந்து சேரும். விரய ஸ்தானத்தில் ராசிநாதன் சனி வருவதால் விசேஷங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அணிவகுத்து வர ஆரம்பிக்கும். விடுபட்ட குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகள் வாழ்க்கைத் துணை பெற்றோர் அனைவரின் உடல் நலம் சீராகி மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். நிலம் வீடு மனை சம்பந்தமாக இருந்து வந்த வழக்குகள் சுமுகமாக தீர்வு காணப்படும்.


தடைபட்ட காரியங்கள் கைகூடும். வியாபாரம் கூட்டுத் தொழில் சுயவேலைவாய்ப்பு இப்படி எந்த தொழிலை செய்தாலும் அது மட்டுமில்லாமல் சீரான லாபம் ஈட்ட ஆரம்பிக்க முடியும். குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் சனி பகவானே பார்ப்பது மிகவும் சிறப்பு. பாக்கிய ஸ்தானத்திலும் அவருடைய பார்வையானது விழுகிறது. முயற்சிகளை செய்ய வேண்டியது அவசியம்.

அயல்நாட்டு வர்த்தகம் ஏற்றம் பெறும். முன் அறிமுகம் இல்லாத யாரையும் நம்பி புதிய துறையில் கால்பதிக்கும் முன் யோசனை அவசியம். கடன்களை உடனுக்குடன் அடைப்பது நன்மையை கொடுக்கும். அரசுக்கு உரிய வரி தொகையினை செலுத்தி விடுவது உத்தமம். உங்களுடைய நேர்மையான முயற்சியால் அரசு அனுமதி வங்கிக் கடன் போன்றவை கிடைக்கும். பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்யும் முன் தகுந்த ஆலோசனை என்பது அவசியம்.

புதிய ஒப்பந்தங்களை கையெழுத்திடும் முன் சரியான நபர்களிடம் ஆலோசனை பெற்று நடைமுறைப்படுத்துவது நல்லது. அரசியல் துறையை சேர்ந்தவர்களுக்கு ஆதரவு அதிகரிக்கும். அதே சமயம் மறைமுக எதிரிகளுடைய பலமும் அதிகரிக்கலாம். வாக்கில் நிதானம் அவசியம். எதிர்காலத்தில் செய்ய வேண்டிய விஷயங்களை இப்போதே திட்டமிடுங்கள். மேலிடத்துக்கு எதிரான வார்த்தைகளை பேச வேண்டாம். கலைத்துறையினருக்கு முயற்சிகள் பலன் தரத் தொடங்கும். உடல் உழைப்பால் முன்னேற்றம் ஏற்பட தொடங்கும்.

வார்த்தைகள் இலட்சியத்தை கைக்கு எட்டினது வாய்க்கு ஏற்றமாதிரி வரும். வாய்ப்புகளை வாசல் வழி அனுப்பி வைக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். எல்லாம் தெரியும் என்ற கருத்தை விட்டுவிடுங்கள். அனைவரிடமும் அன்பும் அடக்கமும் இருந்தால் அனைத்தும் ஏற்றம் ஆகும்.


பெண்களுக்கு நற்செய்திகள் மனதில் மகிழ்ச்சி நிறையும். நீண்ட கால கனவாக இருந்த வீடு மனை வாங்கும் யோகம் கிட்டும். நான்காமிடத்தில் இருக்கக்கூடிய ராகு அனைத்து விதத்திலும் உங்களுக்கு நன்மைகளை ஏற்படுத்திக் கொடுப்பார்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் நல்லபடியாக கனிந்து வரும். ஆடை ஆபரண பொருட்கள் விலை உயர்ந்த நகைகளை அணிந்து கொண்டு வெளியூர் பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாழ்க்கை துணையுடன் பேசும்போது கருத்து தெரிவிக்கும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம். சுப காரியங்கள் நடக்கும் போது வாக்கில் இனிமை மிக மிக முக்கியம். உறவுகள் யாரிடமும் அனாவசிய கோபமும் வேண்டாம். பணிபுரியும் இடத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.


மாணவர்கள் மனம்போல் மதிப்பு மதிப்பெண் பெறக்கூடிய காலகட்டம். அன்றன்றைய பாடங்களை அன்றன்றே படிப்பது மிகுந்த நன்மையை கொடுக்கும். வெளியூர் வெளிநாடு சம்பந்தப்பட்ட இடங்களில் படிப்பவர்கள் அந்தந்த இடத்தின் நாட்டின் சட்ட திட்டங்களை முழுமையாக மதிப்பு நடப்பது அவசியம். தீய சகவாசம் கூடவே கூடாது. சோம்பேறித்தனத்தை ஒதுக்குவது நல்லது.

பரிகாரம்: 

விநாயக பெருமானை வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். உடல் ஆரோக்யம் உண்டாகும். சிறப்பு பரிகாரம்: சனிக்கிழமைதோறும் கணபதிக்கு தேங்காய் மாலை சாத்தி வழிபடவும். சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸம் சனைச்சராய நம:” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும். 

அதிர்ஷ்ட எண்கள்:

 1, 4, 6, 9. அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், சுக்கிரன். அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு. அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வெள்ளி

Comments

Popular posts from this blog

EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்..

EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்., 1. https://emis.tnschools.gov.in/ வலைதள முகவரிக்கு செல்லவும்...

முட்டைக்கோஸ் பொங்கல் | CABBAGE PONGAL பச்சைப்பருப்பை

  தேவையான பொருட்கள் முட்டைக்கோஸ் 250 ஜிஎம்எஸ் மூங் டால் 1 ஃபிஸ்ட்ஃபுல் (பச்சைப்பருப்பு) நெய் 3 டீஸ்பூன் முந்திரி பருப்புகள் 1 டீஸ்பூன் மிளகுத்தூள் 1 டீஸ்பூன் சீரக விதைகள் 1 டீஸ்பூன் இஞ்சி துருவல் 2 டீஸ்பூன் தேவைக்கேற்ப உப்பு HING 1/2 TSP கறிவேப்பிலை 1 டீஸ்பூன் அறிவுறுத்தல்கள் முட்டைக்கோஸை சாப்பரில் நறுக்கி தனியாக வைக்கவும். பச்சைப்பருப்பை குக்கரில் வேகவைத்து, நன்றாக மசிக்கவும். ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் கீல், சீரகம், மிளகுத்தூள், துருவிய இஞ்சி, முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதை ஒதுக்கி வைக்கவும். அதே கடாயில் துருவிய முட்டைக்கோஸ் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்க்கவும். கடாயின் மூடியை மூடி, முட்டைக்கோசுடன் உப்பு சேர்த்து நன்கு சமைக்கவும். வெந்ததும் வேகவைத்த பருப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். உப்பு சுவைக்கு ஏற்ப சரிசெய்யவும். பொங்கலில் பொரித்த பொருட்களை சேர்க்கவும். நன்றாக கலக்கவும். எனக்கு இன்னும் கொஞ்சம் நெய் சேர்க்க வேண்டும். பரிமாறும் தட்டுக்கு மாற்றவும். தேங்காய் சட்னி, சாம்பார் அல்லது அவக்கை ஊறுகாயுடன் சூடாக பரிமாறவும். படம் வாரியான வழிமுறைகள் தேவையான அளவு தண்...

மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023  மகரம்:  மகர ராசி அன்பர்களே  கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு பிறகு உங்கள் ராசிநாதன் சனிபகவான் உங்கள் ராசிக்கு வருகை தந்திருக்கிறார். ஏதோ ஒரு நிர்பந்தத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படலாம். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். குடும்பம் சார்ந்த விஷயங்களில் பேசும்போது கருத்து தெரிவிக்கும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.