Skip to main content

விருச்சிகம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

விருச்சிகம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

விருச்சிகம்: 

விருச்சிக ராசி அன்பர்களே! 

சனிபகவான் உங்க ராசிக்கு மூன்றாம் இடமான மகரத்துக்கும், நான்காம் வீடான கும்பத்துக்கும் உரியவர். இதுவரைக்கும் உங்க ராசிக்கு இரண்டாம் இடமான தனுசில் இருந்த அவர் தற்போதைய பெயர்ச்சியில மூன்றாம் இடமான மகரத்துக்கு மாற்றம் அடைகிறார். ஏழரைச் சனியின் ஆதிக்கத்தில் பாதச் சனியில் இருந்து நீங்கள் விடுபடக் கூடிய காலகட்டம். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு இனிமையை இரட்டிப்பாகத் தரும். பணியிடத்தில் இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களும், தடைகளும், விலகும்.


வருமானம் பெருகுவதற்கு பல வழிகள் ஏற்படும். உங்கள் திறமைகள் வெளிப்படும். ஆதரவும் ஆதாயமும் அதிகரிக்கும்.உங்கள் ராசிக்கு தனவாக்கு குடும்ப ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த சனி பகவான், தற்பொழுது தைரிய வீர்ய இளைய சகோதர ஸ்தானமான மகர ராசிக்கு மாறுகிறார். இப்படி மாறக்கூடிய சனி பகவான் தனது மூன்றாம் பார்வையாக உங்களுடைய பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானம் – ஏழாம் பார்வையாக உங்களுடைய பாக்கிய ஸ்தானம் – பத்தாம் பார்வையாக உங்களுடைய விரய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

இந்த சனிப் பெயர்ச்சியில் கலைத் துறையினருக்கு உடன் பணிபுரிபவர்கள் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடலாம். அரசியல்வாதிகளுக்கு முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். அனைவரிடத்திலும் உறவு சுமூகமாக இருக்கும். மேலதிகாரிகள் பாராட்டும், சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிட்டும். 

வெளி வட்டாரத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும்.அதேசமயம் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலக விஷயமோ, அந்தரங்க விஷயமோ பிறரிடம் பேச வேண்டாம். நண்பர்களின் குறைகளைப் பெரிதுபடுத்தாமல் அவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். சிலருக்கு அலுவலகப் பணி தொடர்பாக வெளியூர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரலாம். தேவையற்ற கவலைகள் உங்கள் மனதை விட்டு அகலும். உங்களின் அணுகுமுறையால் பகைவர்களையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள்.


உத்யோகஸ்தர்கள் தங்கள் பணிகளைச் சரியாகச் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக வேலைகள் தொடர்பான பயணங்களால் நன்மை உண்டாகும். பண வரவுக்குக் குறைவு ஏற்படாது. உங்களின் தன்னம்பிக்கை உயரும். கூட்டாளிகளிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும். அரசியல் வாதிகளுக்குப் பெயரும், புகழும் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் பாராட்டப்படுவீர்கள். அமோகமான ஆதரவும், ஆதாயமும் பெறக்கூடிய காலகட்டம். புதிய பொறுப்புகளையும் பெறுவீர்கள். குதர்க்கமான நட்புகளை அடையாளம் கண்டு விலக்குவது அவசியம். உங்கள் திறமையினால் புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். உங்கள் செயல்களில் தனித் திறமையை வெளிப்படுத்துவீர்கள்.

பெண்களுக்கு தடைப்பட்ட சுபகாரியங்கள் அணிவகுத்து வர ஆரம்பிக்கும், தடைப்பட்ட சுபகாரியங்கள் மளமள என்று கைகூடும். நீண்டகாலமாக குழந்தை இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி ஏற்படும். குலதெய்வ வழிபாட்டை நிறைவேற்ற சந்தர்ப்பம் அமையும். வாழ்க்கைத்துணை உடல் நலம் சீராகி மனதுக்கு மகிழ்ச்சி தரும். இழுபறியாக இருந்த வழக்குகள் சுமுகமாக தீர்வாகும். சேமிப்பு உயரும். வீடு,மனை வாங்கும் யோகம் நிச்சயம் ஏற்படும்.ஆடை-ஆபரண புதுவாகனம், வீடுமாற்றம் சிலருக்கு கைகூடும். விட்டுப்போன உறவும் நட்பும் உங்க அன்பை உணர்ந்து மீண்டும் திரும்பி வரும்.


சகோதரவழி உறவுகளால் சங்கடம் வரலாம். விட்டுக் கொடுத்துப்போவதும், வீண்வாதம் தவிர்ப்பதும் நல்லது. இளைய சகோதர சகோதரிகள் உடல்நலத்துல கூடுதல் அக்கறை அவசியம். மின்சாதனங்களைப் பயன்படுத்தும்போது கூடுதல் கவனம் அவசியம்.மாணவர்கள் வெளிநாட்டுக் கல்வி வாய்ப்பும், கடனுதவி கிடைத்து மகிழ்ச்சி தரும். உழைப்பிற்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். பெற்றவர்கள், பெரியவர்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நன்மையை தரும். விளையாட்டுகளிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள்.

பரிகாரம்:

 துர்க்கை அம்மனை செவ்வாய்கிழமைகளில் பூஜை செய்து வழிபட எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்தி தரும்.

சிறப்பு பரிகாரம்:

 செவ்வரளி மாலையை அருகிலிருக்கும் செவ்வாய்கிழமை தோறும் அம்மன் கோவிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.



சொல்ல வேண்டிய மந்திரம்:

 “ஓம் ம் துர்க்காயை நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும். அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 7, 9. 

அதிர்ஷ்ட ஹோரைகள்: 

ஞாயிறு, செவ்வாய், குரு. அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு. அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.

Comments

Popular posts from this blog

EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்..

EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்., 1. https://emis.tnschools.gov.in/ வலைதள முகவரிக்கு செல்லவும்...

மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023  மகரம்:  மகர ராசி அன்பர்களே  கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு பிறகு உங்கள் ராசிநாதன் சனிபகவான் உங்கள் ராசிக்கு வருகை தந்திருக்கிறார். ஏதோ ஒரு நிர்பந்தத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படலாம். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். குடும்பம் சார்ந்த விஷயங்களில் பேசும்போது கருத்து தெரிவிக்கும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.

Aadhaar-ல் முகவரியை மாற்ற வேண்டுமா? mAadhaar App மூலம் நொடியில் முடியும் வேலை

 Aadhaar-ல் முகவரியை மாற்ற வேண்டுமா? mAadhaar App மூலம் நொடியில் முடியும் வேலை புதுடில்லி: இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் மிக முக்கியமான ஆவணமாகும். ஆதார் அட்டையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்குகிறது. இது அட்டைதாரரின் அனைத்து தகவல்களையும் கொண்டிருக்கும். ஆதார் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவர பதிவுகளையும் கொண்டிருக்கும்.