Skip to main content

மீனம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

 மீனம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

மீனம்: 


மீன ராசி அன்பர்களே 

பகவான் உங்களுடைய லாப ஸ்தானம் மற்றும் விரய ஸ்தானத்திற்கு உரியவர். அவர் தற்பொழுது உங்களுடைய தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானமான மகர ராசிக்கு மாற்றம் அடைகிறார். இதுவரை ஜீவன ஸ்தானமான 10-ஆம் இடம் வந்த சனி பகவான் அனைத்து வகையிலும் முன்னேற்றம் தடைகளையும் ஏமாற்றங்களையும் கொடுத்தார்.


உங்களுடைய திறமையையும் புத்தி சாதுரியம் வெளிப்படுத்த முடியாத நிலை இருந்தது. இனி அனைத்தும் மாறும். பொதுவாக எந்த ராசிக்காரருக்கு சனி பகவான் 11-ஆம் இடம் இப்போது நல்லதையே செய்வார் என்பது ஜோதிட சாஸ்திர விதி. அதுமட்டுமல்லாமல் சனிபகவான் உங்கள் ராசிக்கு நட்பு கிரகமாக இருக்கிறார். அவர் இப்பொழுது செல்லக்கூடிய மகர ராசி என்பது அவருக்கு ஆட்சி வீடு என்பதும் கூடுதல் பலம். இந்த சனிப்பெயர்ச்சி உங்களுக்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடியதாக இருக்கும்.

குடும்பத்தில் குதூகலம் தொடங்கும் உறவுகள் இடையே இருந்துவந்த சுணக்கம் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். விலகி இருந்த சொந்தங்கள் ஆனந்தமாக அணிவகுத்து வீடு தேடி வர ஆரம்பித்தார்கள். தடைபட்டிருந்த சுப காரியங்கள் நல்லபடியாக கைகூடும். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த மணப்பேறு மகப்பேறு உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் உடல்நலம் சீராக இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி தரும். வீடு-மனை யோகம் ஏற்படும். சகோதர வழி உறவுகளால் இருந்துவந்த சங்கடங்கள் நீங்கும்.


தொழிலில் இதுவரை இருந்து வந்த முட்டுக்கட்டைகள் யாவும் விலகும். முயற்சிகள் பலிதமாகும். சிக்கல்கள் நீங்கும். ஏற்றமும் மாற்றமும் முன்னேற்றமும் சீராக வர ஆரம்பிக்கும். எதிரிகளால் ஏற்பட்டிருந்த தடைகள் நீங்கி நன்மைகள் அதிகமாகும். அதே சமயத்தில் தொழிலில் நேரடி கவனமும் முறையான திட்டமிடலும் சரியான ஆலோசனையும் மிக மிக முக்கியம். எதிர்பார்க்கக் கூடிய விஷயங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும். எந்த சூழ்நிலையிலும் குறுக்குவழிகளை கையால் நேர்வழியை கையாள்வது நன்மையை கொடுக்கும். உங்களிடம் பணிபுரிபவர்கள் பணிபுரிபவர்களிடம் அன்பும் ஆதரவும் மிக மிக அவசியம். சட்டத்திற்குப் புறம்பான சகவாசம் என்பது நிச்சயமான முறையில் வேண்டாம். தேவையற்ற கடன்களை வாங்குவதை தவிர்க்கவும்.

அரசியல் துறையினருக்கு அவஸ்தையான நிலை மாறி ஆதரவு அதிகரிக்கும். இந்த சமயத்தில் தலைக்கனமும் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது நல்லது. தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மறைமுக எதிரிகள் பலம் குறையும். சட்டத்திற்கு புறம்பான காரியங்களைச் செய்வதால் எச்சரிக்கையாகவும் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. உங்களுடைய ராசியை சனி பகவானின் மூன்றாம் பார்வையாக பார்ப்பதால் வாக்கில் கவனம் மிக மிக மிக அவசியம். புறம் பேசும் நபர்களை ஒதுக்கித் தள்ளுங்கள்.


யாருக்கும் வாக்குறுதி கொடுப்பது முன் உத்தரவாதம் கையெழுத்து போடுவதற்கு முன் அதில் இருக்கக்கூடிய தகவல்களை முழுமையாக படிப்பது நல்லது. வெளியூர் பயணங்களின்போது பொருட்களில் கவனம் அவசியம். கலைத்துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வந்து சேரும். வரக்கூடிய வாய்ப்புகள் அனைத்தையும் முழுமனதோடு ஏற்றுக் கொள்ளும்போது வளமான எதிர்காலம் உங்களுக்கு உருவாகும். தேவையில்லாத தினமும் சிற்றின்ப நாட்டமும் சீரழிவை உங்களுக்குக் கொடுக்கலாம். மிகவும் எச்சரிக்கை என்பது அவசியம். பெண்களுக்கு வரக்கூடிய வாய்ப்புகளால் நன்மைகள் உங்களுக்கு வந்து சேரும்.

இந்த ராசியில் பிறந்த பெண்களை பொறுத்தவரை புன்னகை அதிகரிக்கும். ஆடை ஆபரணச் சேர்க்கைகள் உங்களுக்கு வந்து சேரும். மனதில் இருக்கக்கூடிய இனம்புரியாத குழப்பம் நீங்கி புத்துணர்ச்சி புதுப்பொலிவு ஏற்படும். தடைபட்ட உயர்வுகள் அனைத்தும் நல்லபடியாக உங்களுக்கு நடைபெறும். மனம்போல் மாங்கல்யம் வந்துசேரும். பொறுமை நிதானம் மிக மிக அவசியம். குடும்பத்து உறவுகளால் உங்களுக்கு குதூகலம் அதிகரிக்கும். சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக உங்களுக்கு நடைபெறும். ஆரோக்கியம் சம்பந்தமான விஷயங்கள் மிகுந்த நன்மையை உங்களுக்கு கொடுக்கும்.


மாணவர்களுக்கு திறமைகள் வந்துசேரும் சோம்பல் இல்லாத முயற்சி முன்னேற்றம் நிச்சயமான முறையில் வெற்றி கொடுக்கும். வேண்டாத நட்பும் கேளிக்கையும் அவசியம் கூடாது. வெளிநாட்டு கல்வி வாய்ப்பு உங்கள் மனம்போல் நல்லபடியாக கல்வி உதவித்தொகை சிறிய வேலைவாய்ப்பு ஆகிய எதிர்பார்ப்புகளும் நிறைவேறும். புதிய முயற்சிகளில் ஈடுபடும் போது மிகுந்த எச்சரிக்கை அவசியம். எந்த சமயத்திலும் குறுக்குவழிகள் என்பது வேண்டவே வேண்டாம்.

பரிகாரம்: 

முருகனை வணங்க எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். சிறப்பு பரிகாரம்: சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகம் செய்யவது நன்மை. சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஷம் ஷண்முகாய நம:” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும்.


அதிர்ஷ்ட எண்கள்: 

2, 6, 9. அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன். அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு. அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வெள்ளி.

Comments

Popular posts from this blog

EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்..

EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்., 1. https://emis.tnschools.gov.in/ வலைதள முகவரிக்கு செல்லவும்...

மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023  மகரம்:  மகர ராசி அன்பர்களே  கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு பிறகு உங்கள் ராசிநாதன் சனிபகவான் உங்கள் ராசிக்கு வருகை தந்திருக்கிறார். ஏதோ ஒரு நிர்பந்தத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படலாம். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். குடும்பம் சார்ந்த விஷயங்களில் பேசும்போது கருத்து தெரிவிக்கும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.