மேஷம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023
மேஷம்:
மேஷ ராசி அன்பர்களே
சனி பகவான் உங்களுடைய ராசிக்கு தொழில் கர்ம ஜீவன ஸ்தானம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு உரியவர். அவர் இதுவரை உங்களுடைய பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் இருந்து தற்பொழுது தொழில் கர்ம ஜீவன ஸ்தானமான மகர ராசிக்கு ஆட்சி மாற்றம் அடைகிறார்.
ஒன்பதாம் இடம் என்பது பாக்கிய ஸ்தானம் என்று சொல்லப்படுகிற பிதுர் ஸ்தானம் ஆகும். சோம்பலில்லாமல் முயற்சிகளில் சுணக்கம் இல்லாமல் செயல்படுவது அவசியம். நல்லது எல்லாம் அள்ளி அள்ளி தர போகிற சனிபகவான் உங்களுக்கு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொடுப்பார்.
சனிப்பெயர்ச்சி உங்களுக்கு இன்னல்களைப் போக்கி இனிமையான சூழலை கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி மலர ஆரம்பிக்கும். அடுத்தடுத்து வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக நடைபெறும். வாரிசுகள் உடல்நலத்தில் இருக்கக்கூடிய உபாதைகள் நீங்கி அவர்களுடைய ஆரோக்கியம் சீரடையும்.
தந்தை – தந்தை வழி உறவினர்களால் இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் நீங்கப் பெறுவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்துவந்த வில்லங்கங்கள் சரியாகும். சகோதர சகோதரிகளுடன் இருக்கக்கூடிய உறவுகள் நல்லபடியாக நடக்கும். பழைய கடன்கள் அடையும்.
ஆடம்பர பொருட்கள் – வீடு புதுப்பித்தல் – வாகன மாற்றம் ஆகியவை ஏற்படும். விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது.
உங்களுடைய எதிர்காலம் மனம் மகிழும்படி இருக்கும். மேலதிகாரிகள் தரக்கூடிய பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் இருப்பது அவசியம். சிலருக்கு முதல்முறையாக வெளிநாடு செல்ல வேண்டிய வாய்ப்புகள் வரலாம். பொருளாதார முன்னேற்றம் காணப்படும்.
நெருங்கிய நண்பர்களின் ஆலோசனையை கேட்டு செயல்பட்டால் வாழ்வில் நிம்மதி ஏற்படும். பொறுப்பை உணர்ந்து செயல்படும்போது சனி பகவான் உங்களுடைய சங்கடங்கள் அனைத்தையும் விரட்டி சந்தோஷத்தை நிறைவேற்றுவார்.
செய் தொழிலில் சீரான வளர்ச்சி காணப்படும். மறைமுக எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி வாழ்க்கை வளர்ச்சிப் பாதையில் செல்லும். இந்த நேரத்தில் உடன் இருக்கும் யாரிடமும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
கூட்டுத் தொழில் நல்லபடியாக முன்னேற்றம் அடையும். சட்டத்திற்குப் புறம்பான எந்த ஒரு செயலையும் செய்ய வேண்டாம். பெரிய முதலீடுகள் செய்யும்போது குடும்பத்தினரிடமும் சரியான ஆலோசகர்களிடமும் ஆலோசனை செய்வது நன்மையை கொடுக்கும்.
வெளிநாடு சம்பந்தப்பட்ட வருடங்களில் நிச்சயமான உறவில் ஈடுபடலாம். ஒப்பந்தங்களை புதுப்பிக்கும்போது கவனம் அவசியம். பிற மொழி மற்றும் வெளிநாடு ஆகிய நபர்கள் மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் நல்லபடியாக உங்களுக்கு நடக்கும்.
இந்த ராசியில் பிறந்த பெண்களுக்கு கஷ்டங்கள் தீரும் மகிழ்ச்சியான காலகட்டம். இதுவரைக்கும் உங்களுக்கு எதிராக நடந்து கொண்டிருந்த காரியங்கள் இனி உங்களுக்கு ஆதரவாக மாறும். இதுவரை உங்கள் வார்த்தைகளில் இருந்து வந்த நிதானமும் பொறுமையும் இன்னும் தொடர்வது நல்லது.
குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குழப்பங்கள் அனைத்தும் நீங்கப் பெறுவீர்கள். சேமிக்கும் பழக்கம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். திருமணம் சம்பந்தமான முயற்சிகள் வெற்றி பெறும்.
வீடு மனை சம்பந்தமான காரியங்களில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். அரசியல் துறையினருக்கு படிப்படியான ஏற்றம் மாற்றம் முன்னேற்றம் வரும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவது வெற்றியை கொடுக்கும் தலை கர்வம் கூடவே கூடாது.
இடமாற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். மேலிடத்துடன் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். முறையான முயற்சிகள் முழுமையான பலனை கொடுக்கும்.
கலைத்துறையினருக்கு சீரான வளர்ச்சி காணப்படும். சின்ன சின்ன விஷயத்திற்கும் இருந்து வந்த தடங்கல்கள் நீங்க பிரிவில் பொருளாதாரம் அபரிமிதமான வளர்ச்சியை பெறும். பணிகளில் சரியான திட்டமிடல் இருந்தால் நிச்சயம் முன்னேற்றம் என்பது காணப்படும்.
மாணவர்களை தவிர்ப்பது மிகவும் அவசியம். வகுப்பில் முழுமையான கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம். ஆசிரியருடைய வழிகாட்டலை அசட்டை செய்யாமல் மதிப்புடன் கேட்டு நடப்பது நல்லது. நட்புகளின் வார்த்தைகளுக்கும் மதிப்பளிப்பது அவசியம்.
விளையாட்டுத்துறையில் சாதனைகளை புரியக்கூடிய ஒரு காலகட்டமாக இது அமைந்திருக்கிறது. மருத்துவம் சார்ந்த கல்வி பயில்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் வந்து சேரும்.
பரிகாரம்:
செவ்வாய்கிழமை தோறும் முருகனை தரிசித்து வணங்க எல்லா துன்பங்களும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும்.
சிறப்பு பரிகாரம்:
அரளிப்பூவை வாங்கி மாலையாக கட்டி அருகிலிருக்கும் முருகன் கோவிலில் உள்ள வேலிற்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் சரவணபவ” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை சொல்லவும். அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9. அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு. அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு. அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
Comments
Post a Comment