மிதுனம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023
மிதுனம்
மிதுன ராசி அன்பர்களே
சனி பகவான் உங்களுடைய ராசிக்கு எட்டு என்று அழைக்கக் கூடிய அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கும் பாக்கிய ஸ்தானத்திற்கு உரியவர். இந்த பெயர்ச்சியில் உங்களுடைய ராசிக்கு ஏழாம் இடம் ராசியில் இருந்து எட்டாம் இடமான மகர ராசிக்கு செல்கிறார். களத்திர ஸ்தானத்தில் இருந்த நேரத்தில் குடும்பத்தில் பலவிதமான உரசல்கள் கருத்து வேற்றுமைகள் இருந்தது. எந்த விஷயத்திலும் நிதானமும் கவனமும் அவசியம்.
உடல் நலத்தில் அதிக கவனம் அவசியம். எந்த இடத்திலும் எல்லாம் தெரியும் என்ற நினைவுடன் ஏனோதானோ என்ற செயல்பாடு கூடாது. கோபம் தவிர்ப்பது நல்லது. கவனமாக செயல்பட்டு கஷ்டங்களை விலக்க வேண்டிய காலகட்டம். எந்த விஷயத்திலும் அலட்சியமும் அவசரமும் கூடவே கூடாது. பணியிடத்தில் மிகவும் கவனம் எச்சரிக்கை அவசியம். சரியான திட்டமிடல் நேர பயன்பாடு என்பது மிக மிக முக்கியம். மேலதிகாரிகள் தரக்கூடிய பணிகளை சரியான நேரத்தில் செய்து முடிப்பது அவசியம். மூன்றாம் நபரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பதும் புறம் பேசும் நபர்களை புறம் தள்ளி வைப்பதும் மிகவும் அவசியம்.
இடமாற்றம் பதவி உயர்வு ஆகியவை மிக நீண்ட முயற்சிகளுக்கு பிறகு கிட்டும். யாருடைய தனிப்பட்ட விஷயத்திலும் தலையிடாமல் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. எந்த சூழ்நிலையிலும் மேலிடத்திற்கு எதிராகவோ கேலியாகவும் பேச வேண்டாம். தொலைபேசியில் பேசும்போது கூட வார்த்தைகளில் கவனம் மிக மிக அவசியம். சின்ன சின்ன சோம்பேறித்தனம் கூட பெரிய இழப்புக்கு காரணமாகலாம். திட்டமிட்டு நேரத்தை சரியானபடி செயல்படுங்கள். பணத்தை கையாளும் முறை மிகவும் அவசியம். தேவையற்ற வீண் ஆடம்பரச் செலவுகளை குறையுங்கள்.
பணியிடத்தில் வேலை பார்க்கும்போது அங்கு இருக்கக்கூடிய கோப்புகளை சரியான வழி பாதுகாப்பது மிகவும் அவசியம். அலுவலக ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். வீடு மனை ஆடை ஆபரணம் வாகனம் சொத்துக்கள் சேரும். கடன்கள் அடையும். ஆடம்பரத்தையும் கேளிக்கையும் தவிர்ப்பது மிகவும் நல்லது. சின்ன சின்ன விஷயங்களுக்கு முரண்டு பிடிப்பது சின்ன சின்ன விஷயங்களுக்கு கோபப்படுவதை தவிர்ப்பதால் மிகுந்த நன்மை வரும். விட்டுக்கொடுத்துச் செல்வது அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். சகோதர வழி உறவுகளால் சிறுசிறு சச்சரவுகள் வரலாம். எந்த சூழலிலும் சினம் இல்லாமல் சிந்திப்பது நல்லது.
அரசியல் துறை சார்ந்தவர்களுக்கு திட்டங்கள் எதையும் முழுமையாக ஆலோசித்து செயல்படுத்துவது நல்லது. யாருக்கும் ஜாமீன் தருவதும் வக்காலத்து வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மேலிடத்திற்கு எதிரான விளையாட்டுப் பேச்சை தவிருங்கள். பெண்களுக்கு பொறுப்புகள் உணர்ந்து செயல்பட்டால் மேன்மைகள் வந்து சேரும். குழந்தைகளுடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் வரும். நீண்ட காலமாக பிரிந்திருந்த உறவுகள் நட்புகள் மீண்டும் வந்து சேரக் கூடிய காலகட்டம்.
விட்டுக்கொடுத்துச் செல்வதால் பழைய பகையை மறப்பதும் மிகவும் அவசியம். விட்டுக் கொடுத்து போவது மட்டுமே இதற்கான தீர்வு. பூமி வீடு மனை ஆகியவை லாபத்தை கொடுக்கும். ஆடம்பரம் கேளிக்கை கொண்டாட்டங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. சேமிக்கும் பழக்கம் மிகவும் அவசியம்.
தொழில் துறையினருக்கு எதுவானாலும் ஏற்றமும் மாற்றமும் நிச்சயம் ஏற்படும். அதேவேளையில் புதிய ஒப்பந்தங்கள் நேரடி விவாதங்கள் ஆகியவற்றில் கவனம் அவசியம். கொடுக்கல் வாங்கல்களை உடனுக்குடன் குறித்து வைப்பது நல்லது. அரசுக்கு புறம்பான எந்த விஷயத்திலும் ஆதாயம் தேட முயற்சிக்க வேண்டாம். அது உங்களுடைய அடிப்படையையே ஆட்டு வைக்கலாம். வேற்றுமொழி பேசுபவர்களால் நன்மைகள் உண்டாகும். இரும்பு ஏற்றுமதி பங்கு வர்த்தகம் ஆகியவற்றில் மிகுந்த எச்சரிக்கை அவசியம்.
கலைத்துறையினருக்கு முழுமையான முயற்சிகளால் முன்னேற வேண்டிய காலகட்டம். யாருடைய தவறான வழிகாட்டும் தலையிடாமல் தலையிடாமல் இருப்பது நல்லது. வாய்ப்புகளில் சிறிது பெரிது என்ற பேதம் வேண்டாம். திட்டமிட்ட செயல்கள் திறமைக்கு மரியாதையை பெற்றுத் தரும். உழைக்கும் நேரம் ஆனது அதிகரிக்கும்.மாணவர்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தி செயல்படுவது அவசியம்.
அதன்மூலம் நிச்சய வெற்றி உண்டாகும். நட்பு வட்டாரத்தில் தீய சகவாசம் தெரிந்தால் உடனடியாக உதறித்தள்ளிவிட்டு ஒதுங்கி இருப்பது நல்லது. எதிர்பார்க்கக்கூடிய வெளிநாட்டு கல்வி வாய்ப்புகள் கல்வி உதவித்தொகைகள் நிச்சயம் கிடைக்கும். தினமும் அதிகாலையில் படிப்பது மனதை தெளிவடையச் செய்யும்.
பரிகாரம்:
புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 6 முறை வலம் வரவும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தாய் தந்தையரின் உடல்நலம் சிறக்கும்.
சிறப்பு பரிகாரம்:
துளசியை பறித்து அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு அர்ப்பணித்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்:
“ஓம் நமோ நாராயணாய” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6. அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், புதன், சுக்கிரன். அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு. அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி.
Comments
Post a Comment