கடகம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023
கடகம்:
கற்கடக ராசி அன்பர்களே
சனி பகவான் உங்கள் ராசிக்கு 7ம் எட்டாம் இடத்திற்கு உரியவர். இந்த சனிப் பெயர்ச்சியில் சனி பகவான் உங்களுடைய ரண ருண ரோக ஸ்தானமான தனுசு ராசியிலிருந்து சப்தம களத்திர ஸ்தானமான மகர ராசிக்கு மாற்றம் அடைகிறார். களத்திரம் என்றால் கணவன்-மனைவி அமைப்பைக் குறிக்கும்.
நெருங்கிய நட்பை குறிக்கும். பொதுவாக ஏழாமிடத்தில் வரக்கூடிய சனியால் குடும்பத்தில் சிறிது நிம்மதி குறைவு ஏற்படலாம். அதனால் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது தம்பதிகள் இடையிலும் சொந்தங்கள் இடையிலும் நட்பின் இடையிலும் விட்டுக்கொடுத்து செல்வது தான்.
நமது வீட்டில் நிம்மதி இருந்தால்தான் வெளியிடத்தில் முழுமையாக செயல்பட முடியும். எனவே இதை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த சனி பெயர்ச்சியால் பெரிய சங்கடங்கள் எதுவும் நேராது. நமது வீட்டு பிரச்சனைக்கு மூன்றாம் நபரை மத்தியஸ்தம் செய்ய கூப்பிடாமல் இருந்தாலே பெரும்பாலான சங்கடங்கள் தவிர்க்கப்படும். உங்கள் செயல்களுக்கு ஏற்ப தான் சனிபகவான் சங்கடமோ சந்தோஷத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் இனிமை நிறைந்திருக்கும். நீண்ட கால கட்டத்திற்குப் பிறகு சந்தோஷமான நிகழ்ச்சிகள் நடைபெறும். மனதிற்குள்ளேயே பூட்டி வைத்திருந்த விஷயங்கள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் வெளிப்படும்.
குடும்பத்து உறவுகளிடம் மனம் விட்டு பேசுவீர்கள். சுபகாரியத் தடைகள் நீங்கும். வீடு மனை வாங்கும் யோகம் நிச்சயமான முறையில் வந்து சேரும். சொத்துக்களில் இருக்கக்கூடிய வில்லங்கங்கள் தீரும். ஆடை ஆபரணச் சேர்க்கைகள் வந்துசேரும். அக்கம் பக்கத்து வீட்டில் இருந்து வந்த தேவையில்லாத வீண் பகை மறையும். பெரியவர்களுடைய உடல்நலத்தில் நல்ல ஆரோக்கிய மேம்பாடு ஏற்படும்.அரசுத் துறை சார்ந்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
எதிர்பார்க்கக்கூடிய பதவி மாற்றம் இடமாற்றம் நிச்சயம் கிட்டும். இந்த சமயத்தில் நீண்ட நாட்களாக எடுக்கக்கூடிய முயற்சிகள் கண்டிப்பான முறையில் வெற்றி பெறும். அரசியல் துறையினருக்கு பதவி புகழ் வந்து சேரும். எதிலும் நேர்மையும் நிதானமும் மிகவும் அவசியம். எந்த வழிகாட்டலும் சரியான திட்டமிடலும் சரியான முன் யோசனையும் அவசியம். சட்டத்திற்கு புறம்பாக எந்த காரியத்தையும் நீங்கள் திட்டமிட வேண்டாம்.
தொழில் துறையினருக்கு சிக்கல்கள் நீங்கும். சீரான வளர்ச்சி ஏற்படும். நேரடி
கவனத்தோடு செய்யும் முயற்சிகள் உரிய லாபத்தை கொடுக்கும். சோம்பலை விட்டு
முயற்சிகளில் கவனம் செலுத்தினால் முன்னேற்றம் கிடைக்கும். நீண்டகாலமாக
எதிர்பார்த்த அரசு சார்ந்த அனுமதி வங்கிக் கடன் போன்றவை கிடைக்கும். அயல்நாட்டு
வர்த்தகத்தில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். புதிய ஒப்பந்தங்களில்
கையெழுத்திடும் சமயங்களில் நிதானம் அவசியம். பங்கு வர்த்தகம் சார்ந்த விஷயங்களில்
அனுபவமிக்க ஆலோசகர்களிடம் ஆலோசனை கேட்டு அதன் பிறகு முடிவெடுப்பது நல்லது. கணக்கு
வழக்குகளை முறையாக குறித்து வைத்திருப்பதும் தன்மையைக் கொடுக்கும்.
பெண்களுக்கு மனதில் இருக்கக்கூடிய இனம்புரியாத அழுத்தம் நீங்கும். உறவுகள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். வாக்கில் மட்டும் கவனம் செலுத்தினால் வாழ்க்கையே இனிப்பாகும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு ஆனந்தமான செய்திகள் வரும். நீண்ட காலமாக பிரிந்திருந்த உறவு நட்பு பகை மறந்து கைகொடுப்பார்கள். குழந்தைகள் விஷயங்களில் இருந்து வந்த கசப்புணர்வு மாறும். புதிய நட்புகள் கிடைக்கும். உங்கள் மீது அக்கறை உள்ளவர்களின் வார்த்தைகளை கவனத்துடன் கேட்பது நன்மையை கொடுக்கும்.
சுபகாரியங்களில் இருக்கக்கூடிய தடைகள் விலகி சுகமாகும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். கலைத்துறையினருக்கு முயற்சி கூடிய மேன்மை அடையும். வேண்டாத நட்புகளையும் உறவுகளையும் இனம்கண்டு ஒதுக்குங்கள். வாய்ப்புக்கான வாசல்கள் திறக்கும். உங்களுடைய படைப்புகள் அதிகமான புகழும் கௌரவமும் பெறும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்கள் படைப்பு ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். சிறிய வாய்ப்புகள் ஆக இருந்தாலும் தவிர்க்காமல் ஏற்றுக் கொண்டால் பெரிய வாய்ப்புகள் வழிவகுக்கும்.
மாணவர்களுக்கு திறமைக்கு பாராட்டும் மேன்மையும் கிடைக்கும். தினமும் அதிகாலையில் எழுவது அந்த நேரத்தில் படிப்பது அதிக நன்மையை பெறலாம். எதிர்பார்க்கக்கூடிய வெளிநாட்டு கல்வி உயர்கல்வி வாய்ப்புகள் நிச்சயம் கிட்டும். நட்புக்காக உறவுகளை விட்டு தருவது ஒருபோதும் கூடாது. சிறிது நேரமாவது மனதை ஒருமுகப்படுத்த கூடிய பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது.
பரிகாரம்:
அம்மன் வழிபாடு எல்லா துன்பங்களையும் போக்கும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும்.
சிறப்பு பரிகாரம்:
வேப்பிலையை அருகிலிருக்கும் புற்று அம்மன் கோவிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் கர்ப்பாயை நம” என்ற மந்திரத்தை தினமும் 6 முறை
சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்:
2, 3, 7. அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், சுக்கிரன், குரு.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தெற்கு. அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன், வெள்ளி.
Comments
Post a Comment