Skip to main content

ரிஷபம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

ரிஷபம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

ரிஷபம்: 

ரிஷப ராசி அன்பர்களே 

சனி பகவான் உங்கள் ராசிக்கு 9-ஆம் இடம் மற்றும் பத்தாம் இடத்திற்கு அதிபதி. அவர் இந்த பெயர்ச்சியில் உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடத்திலிருந்து ஒன்பதாம் இடத்திற்கு செல்கிறார்.

அஷ்டம ஸ்தானத்தில் இருந்த சனி பகவானால் பலவிதமான சங்கடங்களை நீங்கள் சந்தித்தீர்கள். இப்பொழுது இந்த பெயர்ச்சியால் நிம்மதியான விஷயங்கள் கிடைக்கும். எட்டாம் இடத்தில் இருந்த போது உடல்நலக் குறைபாடுகள் பலவிதத்திலும் உங்களை பாடு படுத்தி வந்தது.


உடல் ஆரோக்கியம் சீரடையும் ஆயுள் ஸ்தானமான எட்டாம் இடத்திலிருந்து சனி விலகுவதால் நன்மைகள் ஏற்படக்கூடிய காலகட்டம். தற்பொழுது சனி பகவான் செல்லக்கூடிய மகர ராசி என்பது அவருடைய ஆட்சி வீடு. இது உங்கள் ராசிக்கு பித்ரு ஸ்தானம் என்று அழைக்கப்படுகிற பாக்கியஸ்தானம் ஆகும்.

வரவேண்டிய பண பாக்கி அனைத்தும் வசூலாகும். விலகி இருந்த நட்புகள் உறவுகள் அனைவரும் மீண்டும் ஒன்று சேர்வார்கள்.

உத்தியோகத்தினருக்கு பணியிடத்தில் பட்ட கஷ்டங்கள் பனிபோல் விலகும். உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த நிலை மாறும். தேவையற்ற அலைச்சல் அதனால் இருந்த உடல் நலக்கோளாறு அனைத்தும் இருந்த நிலை நிச்சயமான முறையில் மாறும்.

எதிர்பார்க்க கூடிய இடமாற்றம் – பதவி உயர்வு – ஊதிய உயர்வு நிச்சயம் கிடைக்கும். உடன் பணி புரிவோர் ஒத்துழைப்பு உங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மூன்றாம் நபர்களின் விஷயத்தில் தலையிடுவது தேவையில்லாமல் கருத்துக் கூறுவதும் விமர்சிப்பதையும் தவிர்ப்பது நன்மையை கொடுக்கும்.

ரகசியங்களை பாதுகாப்பது அவசியம். எதிர்பாராத பணிச்சுமை அதிகமான பொறுப்புகள் வந்தால் ஏற்றுக்கொள்ளுங்கள். அனைத்தையும் நல்லபடியாக முடிக்கக் கூடிய திறமை உங்களுக்கு உண்டு. தொழில் சார்ந்த விஷயங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் சீராகும்.


ஆதாயம் ஏற்படும். நீண்டகாலமாக தேங்கிக்கிடந்த வர்த்தகம் மீண்டும் தடைகள் விலகி லாபம் தர ஆரம்பிக்கும். வெளிநாட்டு வர்த்தகம் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய முதலீடுகளை வாழ்க்கைத்துணையுடன் ஆலோசனை செய்து அதன் பிறகு முடிவெடுப்பது நன்மையைக் கொடுக்கும்.

அரசு வழியில் எதிர்பார்க்கக்கூடிய உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்தில் கடன்கள் கிடைக்கும். தொழிலில் செய்ய நினைத்திருந்த மாற்றங்கள் நிச்சயமாக முறையில் நடைபெறும். பழைய கடன்கள் கண்டிப்பாக அடைபடும்.

அரசியல் துறையினரை பொருத்தவரை ஆதரவு மிக அதிகமாகும். சிலருக்கு கூடுதல் பொறுப்பும் பதவியும் தேடி வரும். இந்த சமயத்தில் மேலிடத்திற்கு உங்களுக்கும் இடையில் சிலர் சூழ்ச்சி வலை பின்னலாம், அவர்களிடம் கவனமாக இருக்கவும்.

வார்த்தைகளில் கவனமாகவும் ஏதேனும் ஆவணத்தில் கையெழுத்து இடும் சமயத்திலும் நிதானமாக இருப்பது நல்லது. யாருக்கும் வீணான வாக்குறுதியும் தருவதை தவிர்ப்பது நலம் புகழ் அதிகரிக்கும். பாராட்டுகள் வந்து சேரும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உடனிருக்கும் யாரோடும் தனிப்பட்ட விஷயத்தில் அனாவசியமாக நுழைய வேண்டாம். பிறரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கும் முன் திட்டமிடுதல் மிக மிக அவசியம் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.


பெண்களை பொறுத்தவரை பல நன்மைகள் வந்து சேரும். மனம் நினைக்கும் மாங்கல்யம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி உண்டாகும். உடல்நலத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் படிப்படியாக தீரும்.

பணவரவு அதிகமாகும் போது சேமிப்பை அதிகப்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனமாகும். எந்த சந்தர்ப்பத்திலும் அதிகமான கோபமோ அதிகமான பிடிவாதமும் இருந்தால் தவிர்த்துக் கொள்ளுங்கள். குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கை துணையிடம் வீண் வாக்குவாதத்தை தவிருங்கள்.

கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வாசல் தேடி வரும். மூன்றாம் நபரை நம்பி உங்கள் பொறுப்பை ஒப்படைக்காமல் நீங்களே நேரடியாக செய்வது நன்மையை கொடுக்கும். பொதுவில் ஏற்றமும் மாற்றமும் முன்னேற்றமும் உங்களுக்கு வந்து சேரும்.

மாணவர்களைப் பொருத்தவரை முயற்சி கூடிய பாராட்டும் பெருமையும் வந்து சேரும். சோம்பலை விட முடியாமல் தவித்த வர்களுக்கு இனி சுறுசுறுப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வெளிநாட்டு கல்வி வாய்ப்பு வேலை வாய்ப்பு உதவி தொகை அனைத்தும் கிடைக்கப்பெறுவீர்கள்.

பெரியோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பு அளிப்பது உங்களுக்கு பெருமையும் புகழும் வந்து சேரும்.

பரிகாரம்: 

வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வரவும்.


சிறப்பு பரிகாரம்: 

மல்லிகையை கட்டி அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்கு அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்கவும். சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் மாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்: 

2, 6, 9. அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன், குரு. அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு. அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி.

Comments

Popular posts from this blog

EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்..

EMIS Website-ல் பள்ளி மேலாண்மைக் குழு (SMC) தீர்மானம் பதிவேற்றுவதற்கான வழிமுறைகள்., 1. https://emis.tnschools.gov.in/ வலைதள முகவரிக்கு செல்லவும்...

மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023

மகரம் சனிப் பெயர்ச்சி பலன்கள் 2020-2023  மகரம்:  மகர ராசி அன்பர்களே  கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு பிறகு உங்கள் ராசிநாதன் சனிபகவான் உங்கள் ராசிக்கு வருகை தந்திருக்கிறார். ஏதோ ஒரு நிர்பந்தத்தால் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலை உங்களுக்கு ஏற்படலாம். எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செய்வது உங்களுக்கு நன்மையை கொடுக்கும். குடும்பம் சார்ந்த விஷயங்களில் பேசும்போது கருத்து தெரிவிக்கும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.

Aadhaar-ல் முகவரியை மாற்ற வேண்டுமா? mAadhaar App மூலம் நொடியில் முடியும் வேலை

 Aadhaar-ல் முகவரியை மாற்ற வேண்டுமா? mAadhaar App மூலம் நொடியில் முடியும் வேலை புதுடில்லி: இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் மிக முக்கியமான ஆவணமாகும். ஆதார் அட்டையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்குகிறது. இது அட்டைதாரரின் அனைத்து தகவல்களையும் கொண்டிருக்கும். ஆதார் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவர பதிவுகளையும் கொண்டிருக்கும்.