Aadhaar-ல் முகவரியை மாற்ற வேண்டுமா? mAadhaar App மூலம் நொடியில் முடியும் வேலை
புதுடில்லி: இந்தியர்கள் அனைவருக்கும் ஆதார் மிக முக்கியமான ஆவணமாகும். ஆதார் அட்டையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வழங்குகிறது. இது அட்டைதாரரின் அனைத்து தகவல்களையும் கொண்டிருக்கும். ஆதார் பயோமெட்ரிக் மற்றும் புள்ளிவிவர பதிவுகளையும் கொண்டிருக்கும்.
ஆதார் தொடர்பான எந்தவொரு புகார் அல்லது திருத்தத்திற்கும் கடைகளுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
mAadhaar App-ன் பயன்பாடு
UIDAI ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் வழியிலும் பல வசதிகளைப் பெறலாம். இந்த வசதிகளைப் பெற நீங்கள் ஆதார் மொபைல் செயலியை (mAadhaar App) பயன்படுத்த வேண்டும்.
mAadhaar செயலியின் அம்சங்கள்
1. mAadhaar App மூலம் நீங்கள் ஆதாரை பதிவிறக்கம் செய்யலாம்.
2. ஆதார் கார்டின் (Aadhaar Card) நிலையை சரிபார்க்கலாம்.
3. ஆதார் மறுபதிப்புக்கு ஆர்டர் செய்யலாம்.
4. உங்களுடைய ஆதார் மையத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
5.உங்கள் முகவரியை ஆதார் அட்டையில் புதுப்பிக்கலாம்.
6. ஆஃப்லைன் e-KYC பதிவிறக்கம் செய்யலாம்.
7. QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம்.
8. ஆதார் விவரங்களை சரிபார்க்கலாம்.
9. ஆதார் லாக்கிங், பயோமெட்ரிக் லாக்கிங் / அன்லாக்கிங் செய்யலாம்.
10. OTP-ஐ உருவாக்கலாம்.
11. சுயவிவரங்களை புதுப்பிக்கலாம்.
12. QR குறியீட்டை பகிரலாம்.
இந்த வழியில் பதிவிறக்கம் செய்யவும்
mAadhaar செயலியை Android-ன் Google Play-வுடன் ios-ன் App store மூலம் பதிவிறக்கம் செய்யலாம். இந்த செயலியில் பல மொழிகள்ளுக்கான ஆப்ஷன் உள்ளது. அதாவது நீங்கள் இந்த செயலியை வெவ்வேறு மொழிகளில் இயக்கலாம். இந்த செயலியை UIDAI உருவாக்கியுள்ளது.
ஒரு செயலியில் பல ப்ரொஃபைல்களை வைத்திருக்க முடியும்
உங்கள் மொபைல் எண் குடும்பத்தின் மற்றொரு உறுப்பினரின் ஆதார் கார்டுடன்
இணைக்கப்பட்டிருந்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் 3 ஆதார் ப்ரொஃபைல்களை
ஒன்றாக வைக்கலாம். செயலியை பதிவிறக்குவதற்கு முன், உங்கள் ஆதார் உடன் எண்
இணைக்கப்பட்டுள்ள அதே சிம் தொலைபேசியில் உள்ளதா என்பதை நீங்கள்
உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.
Comments
Post a Comment