உயிர் பாதுகாப்பில் அலட்சியம் காட்டாமல், கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பொருத்திய பம்பர்களை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால், ரூ.5 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புக்கு 4 சக்கர வாகனங்களில் பொருத்தப்படும் பம்பர்களும் முக்கிய காரணமாக உள்ளது. எனவே, கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர்களை பொருத்தக் கூடாது என மத்திய அரசின் போக்குவரத்து அமைச்சகம் கடந்த 2017-ல் உத்தரவிட்டது. ஆனால், கார்களை வாங்கும் பெரும்பாலானோர், கார் விபத்தில் சிக்கும்போது காருக்கு சேதாரம் ஏற்படுவதைத் தவிர்க்க ‘கிராஷ் கார்டு' எனப்படும் பம்பரை பொருத்துகின்றனர். அதேநேரம், சாலைவிபத்தின்போது உயிரிழக்க இந்தபம்பர்களும் காரணமாக அமைந்துவிடுகிறது என்பது பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை. எனவே, விதிகளை மீறி பம்பர் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், வாகன ஆய்வாளர்கள் சோதனை நடத்தி வரு கின்றனர். இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு வகை வாகனமும்...